Wednesday, 14 August 2019

drbala avalurpet

#கிரந்தி_கரப்பான்_இவைகளுக்கு_எண்ணெய்.!

1.#விழுதிவேர்

2.#விழுதியிலை

3.#கொட்டைப்பாசியிலை

4.#சங்கன்_இலை

5.#கையாந்தகரை_இலை

6.#செறுப்படை_இலை

7.#வெள்ளைப்பூண்டு

8.#வசம்பு

இவைகள் வகைக்கு பத்து கிராம் எடுத்து நன்றாக சூரணித்தி (பொடியாக்கி), 800 மில்லி ஆமணக்கெண்ணெயில் கலந்து அடுப்பேற்றி மெழுகு பதமாகக் காய்ச்சி கீழிறக்கிச் சூடாறுமுன் வெள்ளை குங்கிலியம் பத்து கிராம் நயமாக பொடித்துப் போட்டு குழப்பி வைக்கவும்.

இதில் தினம் 15 துளிகள்வரை காலை ஒருவேளை மட்டும் மூன்று நாள் கொடுக்கலாம்.

கரப்பான், கிரந்தி முதலிய பிணிகள் தீரும்.

தேவையெனில் பத்து நாள் இடைவெளி விட்டு மீண்டும் கொடுக்கலாம்.

இவ்வியாதிகள் மறுபடியும் கிளைக்காது.

No comments:

Post a Comment

drbala avalurpet