Wednesday, 7 August 2019

drbala avalurpet

பிரசவ லேகியம்-

தேவையான பொருட்கள்:-

சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
அதிமதுரம் – 20 கிராம்
சித்தரத்தை – 20 கிராம்
லவங்கம் – 20 கிராம்
கண்டத்திப்பிலி – 50 கிராம்
வால்மிளகு – 10 கிராம்
ஓமம் – 25 கிராம்
சீரகம் – 50 கிராம்
ஜாதிக்காய் – 3
கருப்பட்டி – 150 கிராம்
நெய் – 100 கிராம்
நல்லெண்ணெய் – 100 மில்லி
பெருங்காயம் – சுமார் 20 கிராம்

பிரசவ லேகியம் செய்முறை-
மேற்கண்டவற்றில், நல்லெண்ணெய், நெய், கருப்பட்டி, பெருங்காயம் ஆகியவற்றைத் தவிர்த்து, மற்றவற்றை, ஒரு வெறும் வாணலியில் வறுத்து, பெருங்காயத்தை சிறிதளவு எண்ணையில் பொரித்து, இதனுடன் சேர்த்து, மிக்சியில் நன்கு பொடி செய்துக் கொள்ளவும்.

பின்னர் இதை சலித்துவிட்டு, அந்தப் பொடியை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு எத்தனை கப் அரைத்த பொடி என்பதை அளந்து பார்க்கவும்.
கப்பின் அளவிற்க்கு கருப்பட்டி எடுத்துக் கொள்ளவும் .

இப்போது ஒரு கடாயில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை போட்டு, அது நன்கு கரைந்தவுடன் எடுத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
பின்னர் கருப்பட்டி பாகை கடாயில் ஊற்றி, கொதிக்க விடவும்.

இந்தப் பாகு கெட்டியாக ஆரம்பித்தவுடன், வறுத்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கிளறவும்.
இதனுடன், நல்லெண்ணையை ஊற்றிக் கிளறவும் .

எல்லாம் சேர்ந்து சுருள வர ஆரம்பிக்கும் போது, நெய்யை முழுவதும் ஊற்றி, மேலும் சிறிது கிளறி, இளகிய பதத்திலேயே இறக்கி வைத்து விடவும்.
நேரம் செல்லச் செல்ல ஆறியதும் இறுகி விடும்.

இதை ஒரு சுத்தமான டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து சாப்பிட வேண்டும் .

அஜீர்ணம், வாயு சேர்தல், பித்தம், ருசியின்மை போன்றவை குறைந்து பிரசவம் ஆன பெண் நன்கு ஆரோக்கியமாக உணவு எடுக்க முடிவதோடு குழந்தைக்கு பாலும் நன்கு சுரக்கும். அதன் பிறகும் தேவை எனில் சாமான்கள் வாங்கி மருந்துப் பொடி தயாரித்துக்கொண்டு பயன்படுத்தலாம். குழந்தை பிறந்த பிறகு ஒருவருட காலம் வரை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment

drbala avalurpet