Wednesday, 14 August 2019

drbala avalurpet

உயர்ந்த சிலாசத்து பற்பம்

சிலாசத்து - 1/2 கிலோ
கந்தகம் - 1 கிலோ
கிளிஞ்சில் சுண்ணாம்பு - 3/4 கிலோ
எலுமிச்சை சாறு - 500 மில்லி

சிலாசத்தை சுண்ணாம்பு தெளி நீரில் 3 மணி நேரம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். கிளிஞ்சில் சுண்ணாம்பை மிதமாக தண்ணீர் தெளித்து நீற்றி வைத்துக் கொள்ளவேண்டும். கந்தகத்தை கடாயிலிட்டு உருக்க வேண்டும். பிறகு நீற்றிய சுண்ணாம்பை தூவி இடைவிடாது கிண்டி விடவும். சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாற்றி அதில் ஊற்றி எரித்து நன்றாக கிண்டி மெழுகு பதத்திற்கு முன்பு எடுத்து சிலாசத்து கல்லுக்கு 1/2 இன்ச் கணத்தில்  அப்பி அதன் மேல் ஒரு காடா துணி சுற்ற வேண்டும்.    அதன் மேல் சுண்ணாம்பு தண்ணீரில் குழைத்து சுமார் 1/4 இன்ச் கணத்தில் சுண்ணாம்பு கவசம் செய்ய வேண்டும். அதன் மேல் ஒரு காடா துணி சுற்ற வேண்டும். நன்றாக காய வைக்க வேண்டும். இதை காய்ந்ததும் குழியில் கனமாக புடமிட வேண்டும்.

அளவு : ஒரு அரிசி எடை முதல் 1 சிட்டிகை

அனுபானம் : வெண்ணை, நெய், தண்ணீர், மோர், சர்க்கரை
பயன்கள் : வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, நீர் தாரையில் வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும், நீர்க்கட்டு, உடல் வெப்பம், சொறி, சிரங்கு, மூட்டு வலி, சுண்ணாம்பு சத்து குறைபாடுக்கு ... மேலும் பல பிரச்சனைகள் தீரும் ...

குறிப்பு : புளி, காரம், நீக்கவும்.

இந்த சிலாசத்து - 100 கிராம்,
பணங் சர்க்கரை - 30 கிராம் இரண்டையும் நெழிக அரைத்து ஒரு சிட்டிகை கொடுக்கலாம். மருந்தும் இனிப்பாக இருக்கும் நல்ல அனுபானமாகவும் இருக்கும்.


No comments:

Post a Comment

drbala avalurpet