Wednesday, 14 August 2019

drbala avalurpet

(அகத்தியர் வைத்திய காவியம் 1500)

அசுவாதி சூரணம்

தேவையான பொருட்கள்

01. சுக்கு  100 கிராம்.
02. மிளகு 100 கிராம்.
03. திப்பிலி 100 கிராம்.
04. ஜாதிக்காய் 100 கிராம்.
05. சாதிபத்திரி 100 கிராம்.
06. ஏலக்காய்  100 கிராம்
07. கிராம்பு  100 கிராம்.
08. அதிமதுரம் 100 கிராம்.
09. கடுகுரோகினி 100 கிராம்.
11. குரோசனி ஓமம் 500 கிராம்.
12. அமுக்கரா 2 கிலோ.
13. மாசீனி 2 கிலோ.

#செய்முறை:

மேற்கண்ட 01 முதல்  12 சரக்குகள் அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து இல வறுப்பாக வறுத்து இடித்து சலித்து அதில் ( no13 ) மாசீனி 2 கிலோ  சேர்க்கவும்.

 அளவு:

1/2 டீஸ்பூன் அளவு  காலை
இரவு உணவுக்கு பின்னர்

அனுபானம்:    தீரும் நோய்கள்:

01. வெண்ணீரில் சாப்பிட்டால் தேள் கொட்டிய விஷம் தீரும்.

02. வெண்ணீர் அல்லது நல்லெண்ணெய் சாப்பிட்டால் விஷகடிகள் தீரும்.

03. தேனில் குழப்பி சாப்பிட்டால்  கனத்த சரீரம் வற்றும். வாத குன்மம் தீரும்.

04. நெய்யில் குழப்பி சாப்பிட்டால்  தேகம் பூரிக்கும். பித்த குன்மம் தீரும்.

05. உள்ளியும். காயமும் கசாயமிட்டு கொடுக்க மாதவிடாய் உண்டாகும்.

06. வசம்பு.  பூண்டும் கசாய மிட்டு கொடுக்க சூலை 18ம், விப்புருதியும் தீரும்.

07. திரு வாத்தி இலை கசாயத்தில் நாள் ஒன்றுக்கு  07 வேளை முதல்  முதல் 09 வேளை கொடுக்க ஒரு நாளில்  கக்குவான் தீரும்.

08. பிரம்மி இலை சாறு 100 மில்லி  நல்லெண்ணெய் 100 மில்லி கலந்து இரவு உணவுக்கு பின் கொடுக்க கர்ப்பப்பை அடைப்பு நீங்கி  கர்ப்பம் உண்டாகும்.

09. பெருங்காயம் 1 டீஸ்பூன்  அசுவாதி சூரணம் 1 டீஸ்பூன் இந்துப்பு 1/4 டீஸ்பூன் சேர்த்து கொடுக்க அண்ட வாயுவுடன் கூடிய வாந்தி, வலிகள் தீரும்.

10. இரவு பசும் பாலில் கலந்து குடித்தால் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி தீரும்.

11.பொதுவாக காலை மாலை பாலுடன் சாப்பிட்டு வர அனைத்து மூட்டு வலிகளும், பலவீனங்களும் குணமாகும்.நரம்பு தளர்ச்சி தீரும்.தாது நட்டம் குணமாகும்.

12.கசப்பு, புளிப்பு நீக்கி உண்டு வரவும்.12திங்கள் சாப்பிட காயசித்தியாகும்..உடல் பொன்னிறமாகும்.கண்டதையும் தின்னாமல் இருந்து வரவும்.

No comments:

Post a Comment

drbala avalurpet