Wednesday, 14 August 2019

drbala avalurpet

பெண்கள் கர்ப்பத்திற்கு விழுதி எண்ணெய்


இம்முறையில் சிற்றாமணக்கு எண்ணெய் என்று வரும். கடையில் இருக்கும் எண்ணெய் பெரிய ஆமணக்கு எண்ணெய்.
படத்தில்  இருப்பது சிற்றாமணக்கு. இந்த
விதை அதிகமாக கிடைத்தால் செக்கில் ஆட்டி எடுத்துக் கொள்ளலாம். சிறிது கிடைத்தால் நமக்கு நாமே எடுத்துக் கொள்ளவாம். எண்ணெய் நாம் எடுக்கும் முறை என்னுடைய பதிவில் முன்பு போட்டு இருக்கிறேன்.

சிற்றாமணக்கு எண்ணெய்  1 லிட்டர்
                  பசு  நெய்  ................1 லிட்டர்
         விழுதி இலைச் சாறு       1 லிட்டர்

வெண்காரம்  20  கிராம்
        சுக்கு        20 கிராம்
         மிளகு     20 கிராம்
      திப்பிலி     20 கிராம்
      வசம்பு        20 கிராம்
     கோஷ்டம்   20 கிராம்
          ஏலம்       20 கிராம்
        கிராம்பு    20 கிராம்

இந்த கடைச் சரக்குகளை தூள் செய்து
பால் விட்டரைத்து மேற்பட்ட எண்ணை
சாறு இவற்றில் கலந்து அடுப்பில் வைத்து பக்குவமாக மெழுகு பதத்தில் எடுத்து
வடிகட்டி பக்குவப் படுத்தவும்.

பெண்கள் மாதவிடாயான மூன்று நாட்களும் காலை வெறு வயிற்றில் 100 மில்லி இந்த
எண்ணை சாப்பிட்ட வேண்டும் என்று சாஸ்திரத்தில் இருந்தாலும் 100 மில்லி
எண்ணையை மூன்று பிரிவாக சாப்பிட்டுக்
கொள்ளலாம். இவ்வாறாக மூன்று நாட்கள்
சாப்பிட வேண்டும்.

பெரும்பாலும் ஆண் குழந்தையே பிறக்கும்

மேலும் கர்ப்ப சூலை  கர்ப்ப சூலை  கர்ப்பக்
கட்டி அதாவது நீர்க்கட்டி சூதக வலி கர்ப்ப புழுக்கள் போன்ற பெண்கள் கர்ப்பப் பை
சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகள்
தீர்ந்து கர்ப்பம் உண்டாகும்.

கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாதவர்களுக்கும் வளர்ச்சி உண்டாகும்.

இந்த மருந்து சாப்பிட்டவர்களுக்கு பிரசவ சன்னி வராது.

கடுகு புளி நல்லெண்ண நீக்கவும்.
ஏழு நாட்கள் கண்டிப்பாக இச்சா பத்தியம்
இருக்கவும்.

இதுதவிர பெண்களுக்கு இரத்தக் குறைவு போன்ற பல பிரச்சனைகளையும் ஆராய்ந்து பார்த்து மருந்து கொடுக்க வும்.

அதே போல் ஆண்களுக்கு விந்தின் அளவு அது நீந்தும் தன்மை உடல் சுடு போன்ற
பிரச்சனைகள் ஆராய்ந்து பார்த்து மருந்து
கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே ஆண்களுக்கு உள்ள லிங்க
செந்தூரம்  வெண்துத்தி கற்பம்  எட்டி விதை கற்பம்  ஸ்தம்பன லேகியம  ஆண்குறி
லேபனம் இது போன்ற மருந்துகள் பயன்படுத்தி ஆண்கள் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

drbala avalurpet