புளியாரை மூல நிவாரண லேகியம்
புளியாரை இலைச் சூரணம் – 100 கிராம்
கடுக்காய் சூரணம் – 50 கிராம்
தான்றிக்காய் சூரணம் – 50 கிராம்
வால்மிளகு சூரணம் – 25 கிராம்
சிறுநாகப்பூ சூரணம் – 25 கிராம்
ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
தோல் சீவிய கருணைக் கிழங்கு – 100 கிராம்
பனங்கற்கண்டு – கால் கிலோ
பசும்பால் – அரை லிட்டர்
முதலில் கருணைக் கிழங்கை தேங்காய்த் துருவல்போல் துருவி, சிறிது நெய்விட்டு வதக்கவும். பிறகு அதை அரைத்து, கலந்து வைத்திருக்கும் சூரணங்களுடன் சேர்த்து பிசறி வைத்துக்கொள்ளவும். பசும்பாலைக் கொதிக்கவைத்து, பனங்கற்கண்டைச் சேர்த்து பாகு செய்து, பிசறி வைத்துள்ள சூரணக் கலவையைச் சேர்த்து லேகியமாகக் கிளறவும். சூடு ஆறிய பிறகு, 100 கிராம் நெய்யை உருக்கி லேகியத்தில் சேர்த்துக் கிளறவும்.
இந்த லேகியத்தில், 48 நாள்களுக்கு அதிகாலை மற்றும் மாலை இருவேளையும் 5 கிராம் அளவு சாப்பிட்டால், உள் மூலம், வெளி மூலம், சீழ் மூலம், ரத்த மூலம், ஆசன அரிப்பு, கடுப்பு, நமைச்சல், எரிச்சல், ஆசன வெடிப்பு போன்ற அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகும்.
No comments:
Post a Comment