Tuesday, 6 August 2019

dr bala siddha

கருப்பு விஷ்ணுச் சக்கரம் :

அப்துல்லா சாகிப்பின் வீரமுனி வாகடத் திரட்டு

தேவையான மருந்துகள்

1.சுத்தி செய்த தாளகம் 30 கிராம்
2.சுத்தி செய்த இரசம் 30 கிராம்
3.சுத்தி செய்த நெல்லிக்காய் கந்தகம் 30 கிராம்
4.சுத்தி செய்த லிங்கம் 30 கிராம்
5.சுத்தி செய்த காந்தம் 30 கிராம்
6.சுத்தி செய்த அயப் பொடி 30 கிராம்
7.வசம்புக்கறி 30 கிராம்
8.பூண்டு 30 கிராம்
9.மூசாம்பரம் 30 கிராம்
10.வேலம் பிசின் 30 கிராம்
11.சுக்கு 30 கிராம்
12.கொடிவேலி வேர் 30 கிராம்
13.நன்னாரி வேர் 30 கிராம்
14.சந்தனம் 30 கிராம்
15.இலுப்பை விதை 30 கிராம்
16.திராட்சை 30 கிராம்
17.பொரித்த பெருங்காயம் 30 கிராம்
18.சுத்தி செய்த நாபி 30 கிராம்
19.தும்பை இலைச்சாறு 1 கிலோ
20.கல்யாணமுருங்கைச் சாறு 1 கிலோ
21.மஞ்சள் கரிசாலைச் சாறு 1 கிலோ
22.நெருஞ்சில் சமூலச் சாறு 1 கிலோ
23.ஆடாதோடா இலைச்சாறு 1 கிலோ
24.உலர்ந்த வேப்பம்பட்டையின் கஷாயம் 1 கிலோ

செய்முறை :

1 முதல் 6 வரையுள்ள சரக்குகளை நன்கு அரைத்து அத்துடன் 7 முதல் 18 வரையுள்ள சரக்குகளின் சூரணங்களையும் கலந்து முறையே 19 முதல் 24 வரையுள்ள சரக்குகளை கொண்டு அரைத்து உலர்த்தி 100 மி.கி மாத்திரைகளாக செய்யவும்.

அளவு : ½, 1 மாத்திரை வரை தாய்ப்பால் அல்லது தேனுடன்

தீரும் நோய்கள் : எல்லாவித ஜண்ணி, அண்டவாதம், திமிர்வாதம், இளம்பிள்ளை வாதம், பாரிச வாதம், தனுர் வாதம், பீனிசம், செவிரோகம், வலிப்புகள், ஜுரம், இருமல், குன்மம், எரி குன்மம், குஷ்டம்.

No comments:

Post a Comment

drbala avalurpet