Thursday, 28 February 2019

tamil maruthuvan

சோரியாசிஸ்க்கு பஞ்சகவ்யம்

ஒன்றரை வருடங்களாக உடல் முழுவதும் சோரியாசிஸினால் பாதிக்கபட்டு அலோபதியில் சிகிச்சை எடுத்துக்கோண்டிருந்தார் ஒரு பெண்மணி. விவாசாய குடும்பத்தை சேரந்த அந்த பெண்மணி தன் கணவருக்கு இயற்கை விவசாயத்தில உதவி புரிவதற்காக ஒரு நாள் பஞ்சகவ்யாவை தனது கைப்பட தயாரித்து கொடுத்தார்.
என்ன ஒரு ஆச்சர்யம், 15 நாள் கழித்து அவருடைய கைகளில் சோரியாசிஸ் சுத்தமாக மறைந்து குணமாகியிருந்தது.

இதன் பயனை உணர்ந்த அந்த பெண்மணி உடல் முழுவதும் பூசி பார்ப்போம் என்று உடலில் பூசி நன்றாக ஊறிய பிறகு குளித்தார். என்னவொரு ஆச்சர்யம் அவர் உடலில் இருந்து  21 நளில் போயே போச்சு . . என்ன கதை சொல்கிறேன் என்று  நினைக்கிறீர்களா ? இல்லை இது  உண்மையில் நடந்தது என்று விவரிக்கின்றது தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் இணையதளம்.      
 
என்ன முயற்சிக்க போகிறீர்களா ? பாதகமில்லை. காரணம் அதில் அடங்கியுள்ளயுள்ளது எல்லாம் இயற்கையான பொருட்கள். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். அதற்க்கு முன் ஒரு அறிக்கை. இயற்கை மருத்துவ கடைகளிலும் ரெடிமேடாக கிடைக்கின்றது. பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய இயற்கை ஊட்டச் சத்து உரமாக விளங்குவது பஞ்சகவ்யம்.

பஞ்சகவ்யம் தயாரிக்கத் தேவையானவை:

1.  பசுவின் புது சாணம் 5 கிலோ.
2. பசுவின் கோமியம் 3 லிட்டர்,
3. பசு மாட்டுப் பால் 2 லிட்டர்,
4. பசுந்தயிர் 2 லிட்டர்,
5. பசு நெய் 1 லிட்டர்,
6.  கரும்புச் சாறு 3 லிட்டர்,
7.  இளநீர் 2 லிட்டர்,
8.  வாழைப்பழம் 12,
9.  கள் (கிடைக்கும் இடங்களில்) 2 லிட்டர்

கரும்புச் சாறு கிடைக்கவில்லையென்றால் 500 கிராம் நாட்டுச் சர்க்கரையுடன் 200 கிராம் ஈஸ்டு சேர்த்து 3 லிட்டர் நீரில் ஊற வைத்தால் 30 நிமிடங்களில் அதே தன்மையுடைய கரைசல் கிடைக்கும்.

பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை:

பசுவின் புது சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை நன்கு கலந்து 3 நாள்களுக்கு அடிக்கடி கலக்கி வைக்கவும். நான்காம் நாள் இந்தக் கலவையுடன் இதர பொருள்களான தயிர், நெய், கரும்புச் சாறு, இளநீர், வாழைப்பழங்கள், கள் ஆகியவற்றை அதனுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை குறைந்த பட்சம் 4 நாள்கள் நன்றாக கலக்கி 15 நாள்கள் வைத்திருந்து 19-ஆம் நாள் முதல் பயிர்களில் தெளிக்கலாம்.

பஞ்சகவ்யத்தில் உள்ள சத்துக்கள்:

பசும் சாணம்: பாக்டீரியா, பூஞ்சானம், நுண் சத்துக்கள்.
பசு கோமியம்: பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்து.
பால்: புரதம், கொழுப்பு, மாவு, அமினோ, அமிலம், கால்சியம் சத்துக்கள்.
தயிர்: ஜீரணிக்கத் தக்க செரிமானத் தன்மையைத் தரவல்ல நுண்ணியிரிகள்.
நெய் : வைட்டமின் ஏ.பி.கால்சியம், கொழுப்புச் சத்து.
கரும்புச் சாறு: சைக்கடோகைனின் எனும் வளர்ச்சி ஊக்கி, அனைத்து வகை தாது உப்புக்கள்.
இளநீர்: நுண்ணுயிர் வளர்ச்சிக்கான இனிப்பு.
வாழைப்பழம், பதநீர்: தாது உப்புக்கள் தரவல்லது. நொதிப்பு நிலை தந்து நுண்ணூட்டச் சத்தை உருவாக்குகின்றன.

முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யத்தில் பயிர் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புக்கும், உறுதுணையாக விளங்கும் நுண்ணுயிர்களான அசோபைரில்லம், அசட்டோபேக்டர், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவையும், பேரூட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் உள்ளிட்ட பயிர்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில் பஞ்சகவ்யா கிருதம் என்ற மருந்தும் உள்ளது. இது பித்த வாதத்தை சமன் படுத்துகிறது.  நரம்பு சம்பந்தமான நோய்களுக்கும், மனவியாதி, வலிப்பு, புத்தி சுவாதீனமில்லாமை, மஞ்சள் காமாலை மற்றும் ஈரல் சம்பந்தமான நோய்களுக்கு உற்ற மருந்தாக உள்ளது.

No comments:

Post a Comment

drbala avalurpet