வெள்ளை பாஷாண வைப்பு ( எங்கள் வீட்டு அனுபவமுறை)
இன்று வெள்ளை பாஷாணம் கடைகளில் கிடைப்பது அரிதாகிவிட்டது. கடைகளில் வெள்ளை பாஷாணம் தர சொல்லி கேட்டால் சங்குபாஷாணத்தை தான் தருகிறார்கள். அந்த சங்குபாஷாணத்தை வெள்ளை பாஷாணம் சொல்லிய இடத்தில் பயன்படுத்தினால் அதில் உள்ள உப்புக்களின் தோஷத்தால் மருந்து மட்டமாகி விடும். எனவே கிடைக்கும் சங்கு பாஷாணத்தை வைத்து வெள்ளை பாஷாணத்தை எப்படி வைப்பு வைத்தெடுப்பது என்பதை இங்கு பகிர்கிறேன்.
வைப்பு வைக்க தேவையான பொருள்கள்:
1. சங்குபாஷாணம் - 100 கிராம்
2. நாட்டு பாகற்காய் அரைத்த விழுது - 1 கிலோ
3. 2 லிட்டர் கொள்ளலவுள்ள மண் சட்டி - I
4. 4 லிட்டர் கொள்ளலவுள்ள மண் சட்டி - I
குறிப்பு : இரண்டு சட்டிகளின் வாய் பொருந்தும்படியாக வாயளவு ஒரே மாதிரி வாங்கவும்.
வைப்பு முறை :
முதலில் மண் சட்டிகள் இரண்டினுள்ளும் கோமயத்தால் கரைத்தெடுத்த சாணிப்பாலை பூசி உலர்த்தி பாங்கு செய்யவும்.
பிறகு 2 லிட்டர் கொள்ளலவுள்ள மண் சட்டியை எடுத்து அதில் அரைத்த பாகற்காய் விழுதை இட்டு அதன் மேல் சங்குபாஷாணத்தை ஒன்றிரண்டாய் நுணுக்கி தூவவும். அதன் மீது 4 லிட்டர் கொள்ளலவுள்ள சட்டியை பொறுத்தி வாய்பந்தனம் செய்து ஏழு சீலை சய்து உலர்த்தவும்.
பிறகு சீலை செய்ததை அடுப்பேற்றி முதல் மூன்று மணி நேரம் தீபாக்னி, அடுத்த மூன்று மணி நேரம் கமலாக்னி, அடுத்த மூன்று மணி நேரம் காடாக்னி என எரித்து ஆற விட்டு ஜாக்ரதையாக சீலையை பிரித்துப் பார்கக கொக்கு நிரத்தில் பதங்கம் ஏரி இருக்கும். அதை பத்தரமாக சேகரித்து பத்திரப்படுத்துக.
இம்முறையில் பதங்கித்து எடுத்த வெள்ளை பாஷாணம் நூறு சதவிகிதம் வைத்தியம் மற்றும் வாதத்திற்கு மறுப்பின்றி ஆகும்.
குறிப்பு :
1. பதங்கிக்கும் போது மேல் சட்டியின் மீது கை குட்டை அளவு கத்தரித்த தடிமனான கோனி சாக்கை பரப்பி அவ்வப்பொழுது அதன் மீது தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
2. இந்த பாஷாணம் பிராணாபத்தை எளிதில் தரக்கூடிய மிகக் கொடிய விஷமாகையால் மிகுந்த சாக்கிரதையுடன் கையாளுங்கள், சறுவர்கள் கைகளுக்கு எட்டாதவாறு பெயர் எழுதிய கண்ணாடி புட்டியலிட்டு பத்திரப்படுத்துக.
நன்றி, இது
பிரேம், ஓசூர் .அவர்கள் அனுபவமுறை வைத்தியர்களுக்கு மட்டும்

No comments:
Post a Comment