Monday, 9 September 2019

drbala avalurpet

கருங்கோழிச் சூரணம்:-

புறணி நீக்கிய 20 பலம் வேப்பம்பட்டையை இடித்துத் தூளாக்கி 16 படி அளவுள்ள காடியில் 20 நாள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்று வயதாகிய கருங்கோழிச் சேவலைக் கொண்டுவந்து குடல், மயிர், கால்,
தலை ஆகியவற்றை நீக்கி அதன் வயிற்றினுள் மேலே ஊறவைத்துள்ள சரக்கையும் 2 பலம்
அசுவகெந்திப் பொடியையும் அடைத்து எல்லா பக்கங்களையும் நன்றாகத் தைத்து ஒரு
தாழியில் அடங்கஞ் செய்து மேல்சட்டி கொண்டு மூடி சீலைமண் செய்து கொண்டு
பின்னர் ஒர் அகன்ற தாழியில் மேற்சொல்லப்பட்ட காடியை ஊற்றி கோழியுள்ள
சட்டியை அதில் கட்டித்தூக்கி, ஒரு சாதி விறகினாலே, அந்தக் காடி ½ படியாகச்
சுண்டும் வரை எரித்தெடுத்து ஆற வைக்க வேண்டும்.
ஆறினபின் கோழியின் எலும்பை மட்டும் நீக்கி விட்டு சதையையும்
உள்ளிருக்கும் மருந்தையும் நிழலில் நன்றாக உலர்த்தி இடித்துச் சூரணம்
செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

10 பலம் பறங்கிப்பட்டைச் சூரணம் மற்றும்
கடுகு
சுக்கு
கருஞ்சீரகம்
திப்பிலி
ஓமம்
கார்போக அரிசி
மிளகு
ஆகியவை வகைக்கு ½ பலமெடுத்து நன்கு சூரணித்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட மூன்று வகைச் சூரணத்தையும் கலந்து கருகாமல் சிறிதளவு வறுத்தெடுத்து ஒரு கலசத்தில் அடைத்துவைத்துக் கொள்ள வேணடும்.

தினமொன்று அரைபலம், தேன். 30 நாட்கள் தினம் ஒரு வேளை உட்கொள்ளத்
தீராதசூலை, குட்டம், முதலிய நோய்கள் நீங்கும். 37 நாட்கள் காலையிலும்
மாலையிலும் தினம் இருவேளை உட்கொள்ள வேண்டும்.

தீரும் நோய்கள்
கிரந்தி
வாயு
ஏரண்டம்
வாதம்
கிரிச்சன வாயு
முதலியன நீங்கும்.
15 நாட்கள் உட்கொள்ள
மண்டையிடி
சூலை ஆகியவைகள் நீங்கும்.

10 நாட்கள் உட்கொள்ள மற்ற எல்லா வியாதிகளும் நீங்கும்.

பத்தியம்:
புளி, உப்பு, பெண்போகம் நீக்க வேண்டும்.
கோழி, முருங்கை, அவரை, துவரம்பருப்பு ஆகும்.

வெந்நீரில் குளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

drbala avalurpet