Friday, 19 April 2019

தமிழ் மருத்துவம் பாலா

அக்கினி குமார செந்தூரம்:-

தே.பொருட்கள்:-
    இரசம், மனோசிலை, வகைக்கு 40 கிராம், காந்தம் 160 கிராம், அயப்பொடி 320 கிராம், இலிங்கம், கல்நார், கல்மதம் வகைக்கு 10 கிராம், சோற்றுக் கற்றாழைச் சாறு செல்லத்தக்களவு.

செய்முறை:
    இரசத்தையும் கந்தகத்தையும் கல்வத்திலிட்டு முறைப்படி, அரைத்துபின், மற்ற சரக்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து, சோற்றுக்கற்றாழைச் சாறு விட்டு 3 மணி நேரம் அரைத்து உலர்த்திப் பொடித்து இரும்புக் கிண்ணத்திலிட்டு கடும் வெயிலில் வைக்க புகைத்து செந்தூரமாகும். அதைக் குப்பியில் அடைத்து நெற்புடமாக மண்டலம் வைத்து எடுத்து பயன்படுத்தவும்.

அளவு:
    100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை

துணைமருந்தும் &
தீரும் நோய்கள்:        இஞ்சிச்சாற்றில் 10 நாட்களுக்குக் கொடுக்க வாதம், சுரம், எண்வகை குன்மம், சன்னிநோய்களும், வெள்ளுள்ளி, தைலத்தில் கொடுக்க சன்னி, கபநோய்களும், தேனில் கொடுக்க மகோதரம், உளமாந்தை, நீர்கோவை, கிராணி, மந்தாக்கினி, நீரழிவு நோய்களும், கரப்பான் சாற்றில் கொடுக்க காமாலை, சோகை, பாண்டு நோய்களும் நீங்கி உடலில் இரத்த தாதுக்கள் பெருக்கமடையும்.

No comments:

Post a Comment

drbala avalurpet