Thursday, 28 February 2019

tamil maruthuvan

ஆஸ்துமாவிற்கு மாத்திரை

லிங்கம்        - 50 கிராம்
வெங்காரம் - 50 கிராம்
சுக்கு             - 50 கிராம்
மிளகு           - 50 கிராம்
திப்பிலி        - 50 கிராம்

அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்துக் கொள்ளவேண்டும். பிறகு தூள் செய்துக் கொள்ளவேண்டும்.

லிங்கத்தை எலுமிச்சை சாறு அல்லது படிகாரத்தில் சுத்தி செய்துகொள்ளவேண்டும்.
வெங்காரத்தை பொரித்து கொள்ளவேண்டும்.
சுக்கை சுண்ணநீரில் சுத்தி செய்த்க்கொள்ளவேண்டும்.
மிளகை மோரில் சுத்தி செய்த்க்கொள்ளவேண்டும்.
திப்பிலியை பழ சாற்றில் சுத்தி செய்த்க்கொள்ளவேண்டும்.

முதிர்ந்த எலுமிச்சை சாற்றால் குறைந்தது இரண்டு சாமம் அரைக்க வேண்டும். அப்பொழுது தான் மருந்து கல்வத்தில் ஓட்டாத மெழுகு பதமாக வரும். இதை சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து கண்ணாடி புட்டியில் அடைக்கவும்.

அளவு : நோயின் தன்மைக்கு ஏற்ப 1 முதல் 2 வரை

அனுபானம் : தூதுவேளை, கண்டங்கத்திரி இதன் தனி சாறு அல்லது கசாயத்தில் கொடுக்கலாம்.

வேளை : காலை இரவு

பத்தியம் : அசைவம், அகத்தி, மொச்சை, எண்ணெய் பலகாரம், கடுகு எண்ணெய் நீக்கவும், பூசணி, ஐஸ் நீக்கவும். குளிர்ச்சி தரும் உணவுகளை நீக்கவும்.

No comments:

Post a Comment

drbala avalurpet