*குடும்ப லேகியம்*
நிலப்பூசனிக்கிழங்கு அமுக்கலாங்கிழங்கு
நன்னாரி வேர் பட்டை
சீரகம்
பரங்கிசக்கை
சுக்கு
இவை வகைக்கு 2 தோலா விதம் எடுத்து கொண்டு இடித்து பொடித்து கொள்ளவும்
சீனாக்கற்கண்டு அரை வீசையை எடுத்து சுத்த நீரில் அலம்பி கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் காய்ச்சவும் அதில் சூரணப்பொடியை போட்டு நன்றாக கிளரி எலரிசி ஒரு தோலா பசு நெய்யில் வறுத்த திரட்ச்சை 5 தோலா உருக்கிய நெய் 2 தோலா இவற்றை போட்டு நன்றாக கிண்டி இறக்கி சிறிது சூட்டுடன் இருக்கும் போது 2 தோலா தேன் விட்டு அரைத்து சீசாவில் பத்திரப்படுத்தவும்
காலை மாலை இரு வேளை கழற்ச்சிக்காய் அளவு காய்ச்சிய வெள்ளாட்டு பாலில் கொள்ள *டான்சில் இருமல் சளி ஆஸ்துமா இளைப்பு * அனைத்தும் குணமாகும் சீதள பதார்தம் நீக்கவும்
*அனுபவ வைத்தியர் T S ஜனககுமாரி* அவர்களின்
மருத்துவ குறிப்பு
No comments:
Post a Comment